Headlines News :
Home » , , , , » பிரெஞ்சுக்காரர்கள் வருகை - நவீன இந்தியா - TNPSC

பிரெஞ்சுக்காரர்கள் வருகை - நவீன இந்தியா - TNPSC



பிரெஞ்சுக்காரர்கள் 

மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போன்றே பிரான்சும் இந்தியாவுடனான வியாபாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டது.   


போர்த்துகீசியராலும், டச்சுக்காரராலும் தூண்டப்பட்ட  பிரெஞ்சுக்காரர்கள் 1664-இல் உருவாக்கப்பட்ட பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி மூலம் தங்கள் வணிக செயல்பாடுகளை தொடங்கினர். ஏனைய ஐரோப்பிய நாடுகளில் வணிக நிறுவனங்கள் தனியார் வணிக நிறுவனங்களாக  இருக்க பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி அரசர் பதினான்காம் லூயின் திட்டமாக அமைந்தது. அவருடைய நிதி அமைச்சரான கால்பர்ட் பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்படுவதற்கு  காரணமாக இருந்தார்.

பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி  அரசால் தொடங்கப்பட்ட முயற்சியாக இருந்ததால் பொது மக்களின் ஆர்வத்தை அது ஈர்க்க தவறியது.


பிரெஞ்ச் குடியேற்றம்

இந்தியாவிலிருந்த பிரெஞ்ச் முகவரான பெர்பர் செப்டம்பர் 4, 1666-இல் முகலாயப் பேரரசர் ஓளரங்கசீப்பிடமிருந்து அனுமதி ஆணை பெற்ற தங்களின் முதல் நிறுவனத்தை டிசம்பர் 1668-இல்  டச்சுக்காரரின் எதிர்ப்பையும் மீறி கரோன் என்பவர்  சூரத்தில் அமைத்தார்.    

ஓராண்டிற்குள் 1669 ல் மார்காரா என்பவர் கோல்கொண்டா சுல்தானிடம் அனுமதி பெற்று மசூலிப்பட்டினத்தில் மற்றொரு நிறுவனத்தை அமைத்தார். அது இரண்டாவது வணிகத்தளம் ஆகும்.இந்தியாவில் காலூன்ற வலுவான இடம் தேவை என்பதை உணர்ந்த நிதியமைச்சர் கோல்பர்ட், ஹேய் ( ஜேக்கப் பிளான்குயிட்  டி லா ஹேய், Jacob Blanquet de la Haye)என்பாரின் தலைமையில் கப்பற்படை ஒன்றை அனுப்பி வைத்தார். 

சாந்தோமிலிருந்தும் மயிலாப்பூரிலிருந்தும் டச்சுக்காரர்களை வெளியேற்றுவதில் பிரெஞ்சுக்காரர்கள்  1672-இல் வெற்றிபெற்றனர். டச்சுக்காரர்களுக்கு எதிராக பீஜப்பூர் சுல்தானின் பிரதிநிதியான உள்ளூர் ஆளுநர் செர்கான் லோடியின் உதவியை பிரெஞ்சுக்காரர்கள் நாடினர். 

1673-இல் குடியேறுவதற்கு பொருத்தமான இடம் எனக்கருதி தனக்கு மானியமாக வழங்கப்பட்ட ஒரு கிராமத்தை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கினார் செர்கான் லோடி. மார்ட்டின் என்பவர் அந்த இடத்தில் பாண்டிசேரியை நிறுவினார். அப்போது புதுச்சேரி ஒரு சிறிய மீனவ கிராமமாக இருந்தது.   மடகாஸ்கரில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் சூரத் வந்த பிரான்சிஸ் மார்ட்டின் என்பவர் புதுச்சேரியின் ஆளுநர் ஆனார்.  செயின் லூயிஸ் எனப்படும் கோட்டை கட்டப்பட்டது.

இந்தியாவில் பிரெஞ்சு குடியேற்றங்களின் அதிகார மையமாக புதுச்சேரியை உருவாக்கினார்.  "நாங்கள் கடந்து சென்ற கிராமப்புற பகுதி (அதாவது புதுச்சேரிக்கு வெளியேயுள்ள பகுதி) மிக நன்றாக விவசாயம் செய்யப்பட்டிருந்தது, மிக அழகாகவும் இருந்தது.  அரிசி ஏராளமாக காணப்பட்டது. எங்கே நீர் இருந்ததோ அங்கே பருத்தி விளைவிக்கப்பட்டது.  புதுச்சேரி நிலப்பரப்பை குறித்து பிரான்சிஸ் மார்டின் இவ்வாறு தனது நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.

1673 ம் ஆண்டு வங்காள முகலாய ஆளுநர் செயிடகானின் அனுமதி பெற்று   சந்தன்நகருக்கு (சந்திரநாகூர்) என்னுமிடத்தில் வணிகத்தலம் அமைக்கப்பட்டது.

டச்சுக்காரர்களுடன் போட்டியும் போர்களும் :

புதுச்சேரியை தங்கள் குடியேற்றமாக்கும் முயற்சியில் பிரெஞ்சுக்காரர்கள்  மிகவும் சிரமப்பட்டனர்.  தங்களின் முக்கிய போட்டியாளரான டச்சுக் காரர்களை முதலில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  

பிரான்ஸ்  மற்றும் ஹாலந்து  இரண்டும் 1672-இல் இருந்து தொடர்ந்து போர்கள் செய்து கொண்டிருந்தன.  இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களுக்கு போதுமான நிதி, ஆயுதம், வீரர்கள் இல்லை. ஏனெனில் அவை வங்காளத்தில் இருந்த மற்றொரு பிரெஞ்சு குடியேற்றமான சந்தன்நகருக்கு(சந்திரநாகூர்) கொண்டு செல்லப்பட்டு இருந்தன. ஆகவே 1693-இல் புதுச்சேரியை டச்சுக்காரர்கள்  எளிதாக கைப்பற்ற முடிந்தது. புதுச்சேரி தொடர்ந்து ஆறு ஆண்டுகள் டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. 1697-இல் ரிஸ்விக் உடன்படிக்கையின்படி புதுச்சேரி மீண்டும் பிரெஞ்சுக்காரர்களுக்கு தரப்பட்டது.  இருந்தபோதிலும் 1699-இல் தான் அது பிரெஞ்சுக்காரர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டது. 1706 இல் பிரான்சிஸ் மார்டின் இயற்கை எய்தும் வரை புதுச்சேரியின் ஆளுநராக இருந்தார்.


பிரெஞ்சுக்காரர்கள்  மேற்கொண்ட பெரு முயற்சியின் விளைவாக 1725-இல் மாஹியையும், 1739-இல் காரைக்காலையும் பெற்றனர்.வங்காளப் பகுதியில் காசிம்பஜார், சந்தன் நகர்,  பாலசோர் ஆகிய இடங்களில் தங்களது குடியேற்றங்களை நிறுவி விரிவு படுத்துவதில் பிரெஞ்சுக்காரர்கள் வெற்றி பெற்றனர். 

பியரி பெனாய்ட் டுமாஸ் என்பவர் (1668-1745) புதுச்சேரியின் மற்றுமொரு சிறந்த ஆளுநராவார்.  இருந்த போதிலும் தங்களை விட மிகவும் வலிமை வாய்ந்த போட்டியாளரான ஆங்கிலேயரின் பயமுறுத்தல்களை அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது.  கி.பி.1742-ஆம் ஆண்டு டியூப்ளே பிரெஞ்சு கவர்னராக பொறுப்பேற்றார்.  இவரது காலத்தில் பிரெஞ்சு ஆதிக்கம் மேலும் வளர்ச்சியடைந்தது.  

இதற்கிடையில் ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆதிக்கப்போட்டி தொடங்கிது.  இது இந்தியாவில் கர்நாடக போர்களாக பிரதிபலித்தன.  இதன் இறுதியில் பிரெஞ்சுக்காரர்க்ள தாங்கள் சேகரித்த செல்வம் அனைத்தையும் ஆங்கிலேயர்களிடம் இழந்தனர்.  இந்தியாவில் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினர். பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர்.  

பிரெஞ்சுக்காரர்கள் வருகை பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.


Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Featured Post

Tnpsc - ஐந்தாண்டு திட்டங்கள் - இந்தியப் பொருளாதாரம் - Indian Economics

1930 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலகட்டத்தில் இந்திய அரசியல் அறிவு சார்ந்தவர்கள் இடையே இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டமிடல் கு...

Popular Posts

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. V - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template