Headlines News :
Home » , , , , » பேரரசுகளின் தோற்றம் - ஹரியங்கா வம்சம் - சிசுநாக வம்சம் - நந்தவம்சம் - இந்திய வரலாறு

பேரரசுகளின் தோற்றம் - ஹரியங்கா வம்சம் - சிசுநாக வம்சம் - நந்தவம்சம் - இந்திய வரலாறு


16 மகாஜனபதங்களில் தொடக்க காலத்தில் காசி சக்தி வாய்ந்ததாக இருந்தது. எனினும் பின்னர் கோசலம் ஆதிக்கம் செலுத்தியது. மகதம், கோசலம், விரிஜ்ஜி, அவந்தி ஆகியவற்றிற்கு இடையே ஒரு அதிகார போராட்டம் தொடங்கி இறுதியில் மகதம் ஆதிக்கம் செலுத்தும் மஹாஜனபதமாக உருவாகி முதல் இந்தியப் பேரரசை அமைத்தது. 

ஹரியங்கா வம்சம் :

பிம்பிசாரர் 

மகதத்தின் படிப்படியான அரசியல் மேலாதிக்க வளர்ச்சி பிம்பிசாரர் காலத்தில் தொடங்கியது.கயாவிற்கு அருகிலுள்ள கிரிவ்ராஜாவை(பழைய இராஜகிருகம்) தலைநகராக கொண்டு ஹரியங்கா மரபு மகத நாட்டை ஆட்சி செய்தது.   

பிம்பிசாரர் திருமண உறவுகள் மற்றும் போர்கள்  மூலம் மகத பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்தினார். கோசல அரசன் பிரசேனஜித் திற்கு தனது சகோதரியை மணம் செய்ததன் மூலம் காசியை வரதட்சணையாக பெற்றார். மேலும் லிச்சாவி, மாத்ரா இளவரசிகளை பிம்பிசாரர் மணந்தார்.

அவந்தி அரசரோடு நட்பான உறவைப் பேணினார். ஆனால் அங்கத்தை ராணுவ பலத்தால் இணைத்துக் கொண்டார்.  இவ்வாறாக மகதம் ஒரு சக்தி வாய்ந்த முக்கியமான பேரரசானது. 

தனது ஆட்சியில் பல்வேறு மதப் பிரிவுகளையும் அவற்றின் தலைவர்களையும் பிம்பிசாரர் ஆதரித்தார். அவர் புத்தரையும் சந்தித்திருக்கிறார்.

அஜாதசத்ரு

அஜாதசத்ரு தன் தந்தை பிம்பிசாரரை கொன்றுவிட்டு ஆட்சிக்கு வந்தார். எனவே, பிரசேனஜித் உடனடியாக பிம்பிசாரருக்கு வரதட்சணையாக தந்திருந்த காசியை திரும்ப எடுத்துக் கொண்டார். இதனால் மகத நாட்டிற்கும் கோசல நாட்டிற்கும் மோதல் உருவானது.  பின்னர் பிரசேனஜித்தை வீழ்த்தி கோசல நாட்டை தன் ஆதிக்கத்திற்கு கீழ் கொண்டு வந்தார் அஜாதசத்ரு. 

பல்வேறு லிச்சாவி இன குழுக்கள் இடையே பகைமையை வளர்ப்பதற்காக தனது அமைச்சர் வாசகராவை அனுப்பினார் அஜாதசத்ரு. லிச்சாவியாரையும் மல்லர்களையும் அவர் வென்றார்.அஜாதசத்ரு மறைந்தபோது மகதம் அசைக்க முடியாத வலுவான அரசு ஆகிவிட்டது. அஜாதசத்ரு முதல் புத்த சமய மாநாட்டை ராஜகிருகத்தில் நடத்தினார்.  அஜாதசத்ருவின் புதல்வன் உதயன் பாடலிபுத்திரத்தில் புதிய தலைநகர் அமைய காரணமானவர். அவருக்கு பின் ஆட்சிக்கு வந்தவர்கள் திறமையற்றவர்களாக விளங்கினர்.

சிசுநாக வம்சம்

ஹரியங்காவை தொடர்ந்து சிசுநாக வம்சம் வந்தது. வாரணாசியின் அரச பிரதிநிதி சிசுநாகர் என்பவர் ஹரியங்கா அரசரைக் கொன்று அரியணை ஏறினார். அதன்பிறகு அவரது மகன் காலசோகன் காலக்கட்டத்தில் ராஜகிருகத்திலிருந்த தலைநகரம் பாடலிபுத்திரத்திற்கு மாற்றப்பட்டது. இரண்டாவது புத்த மாநாட்டை வைசாலியில் நடத்தியவர் தான் காலசோகன்.சுமார் 50 ஆண்டுகாலம் ஆட்சி செய்தனர். பிறகு அரியணையைக் அவர்களிடமிருந்து மகாபத்ம நந்தர் கைப்பற்றினார்.

நந்தவம்சம்

இந்தியாவில் முதல் பேரரசை உருவாக்கியவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் நந்தர்கள் ஆவர்.முதல் அரசர் மஹாபத்மா என்ற அரசர் ஆவார்.  இவர் சிசுநாக அரசனைக் கொன்று அரியணையை கைப்பற்றியதாக நம்பப்படுகிறது. 

வலிமை

நந்தர்களின் பேரரசு நன்கு விரிவடைந்து செல்வமும் அதிகாரமும் பரவலாக அறியப்பட்டன. எதிரிகளுக்கு அச்சமூட்டுவதாகவும் இருந்தன. பேரரசை விரிவாக்கும் பணியில் பல இனக்குழுக்களை அழித்தார்கள்.  ஓரளவு சுய அதிகாரம் கொண்டிருந்த சத்ரியர்கள் ஆளப்பட்ட அரசுகளையும் அடிமைப் படுத்தினார்கள்.  இவ்வாறாக ஒரு சர்வாதிகாரம் மையப்படுத்தப்பட்ட அரசை உருவாக்கினார்கள்.  மகாபத்ம நந்தர் தொடர்ந்து அவருடைய எட்டு புதல்வர்கள் ஆட்சி செய்தார்கள்.  இவர்கள் அனைவரும் சேர்ந்து நவநந்தர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

நந்த வம்சத்தினர் மகதத்தின் ஆட்சியை வட இந்தியா முழுவதும் பரப்பினர் மகாபத்ம நந்தன்  விந்திய மலை கடந்து பகுதிகளையும் கைப்பற்றினார். இவர் சிந்துநதி முதல் தக்காணம் வரையில் பரந்து விரிந்த முதல் இந்திய பேரரசாக மதத்தை உருவாக்கினார். 

சமூகத்தின் கடைசி நிலையில் வைக்கப்பட்டிருந்த சூத்திரர்களான சிசுநாகர் மகாபத்மநந்தன் மன்னர்களாக அடுத்தடுத்து முடி சூடினார். அக்காலத்தில் இது ஒரு பெரும் புரட்சி எனலாம். நந்த வம்சத்து அரசர்கள் சமண மதத்தை நாடுபவர்களாக இருந்தனர்.

கல்வெட்டு

ஒடிசாவின் புவனேஸ்வர் பகுதிக்கு அருகிலுள்ள உதயகிரியில் காணப்படும் ஹிதிகும்பா (யானை குகை) கல்வெட்டு  அரசன் மகாநந்தர் வெட்டிய நீர் வடிகாலை பற்றி குறிப்பிடுகிறது.  இது நந்த அரசு எந்த அளவிற்கு பரவியிருந்தது என்பதை காட்டுகிறது. நந்தர்கள் திறமையான நிர்வாகிகளாக, பேரரசை விரிவுபடுத்தியவர்களாக இருந்த போதிலும் அவர்கள் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை..

பேரரசுகளின் தோற்றம் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் செய்து நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Featured Post

Tnpsc - ஐந்தாண்டு திட்டங்கள் - இந்தியப் பொருளாதாரம் - Indian Economics

1930 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலகட்டத்தில் இந்திய அரசியல் அறிவு சார்ந்தவர்கள் இடையே இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டமிடல் கு...

Popular Posts

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. V - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template