இந்திய அரசியலமைப்பின் பகுதி 5 இல் 52 முதல் 70 வரையிலான சரத்துகள் அதாவது சட்டப்பிரிவுகள் மத்திய அரசு நிர்வாகம் பற்றி குறிப்பிடுகிறது.
இந்திய நாட்டின் உயர்ந்த அரசாங்க அமைப்பு மத்திய அரசு ஆகும். இதன் தலைமையகம் புதுதில்லியில் அமைந்துள்ளது.
நமது அரசியலமைப்புச் சட்டம் மக்களாட்சி அடிப்படையிலான அரசாங்கத்தை நமக்கு வழங்குகிறது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இந்தியாவின் பரந்த மற்றும் பன்முகத் தன்மையை கருத்தில் கொண்டு இந்தியாவிற்கு கூட்டாட்சி முறையிலான அரசை வழங்கியுள்ளனர்.
மத்திய அரசு மூன்று அங்கங்கள் கொண்டது. அவை நிர்வாகம், சட்டமன்றம் நீதித்துறை ஆகியவை. நிர்வாகம் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் அமைச்சரை தலைவராக கொண்ட அமைச்சரவை குழு மற்றும் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆகியோரை உள்ளடக்கியதாகும். மத்திய சட்டமன்றம் நாடாளுமன்றம் என்று அழைக்கப்படுகிறது இது இரண்டு அவைகளைக் கொண்டது. அவை மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகும் மத்திய நிதித்துறை உச்சநீதிமன்றத்தை கொண்டுள்ளது.