இந்திய பொருளாதாரத்தின் இயல்புகள்:
1.இந்திய பொருளாதாரத்தின் பலங்கள்
2.இந்திய பொருளாதாரத்தின் பலவீனம்
3.மக்கள் தொகை
1.இந்திய பொருளாதாரத்தின் பலங்கள்
1.இந்திய பொருளாதாரத்தின் பலங்கள்
2.இந்திய பொருளாதாரத்தின் பலவீனம்
3.மக்கள் தொகை
1.இந்திய பொருளாதாரத்தின் பலங்கள்
1.இந்தியா ஒரு கலப்புப் பொருளாதாரம்
இந்திய பொருளாதாரம் கலப்பு பொருளாதாரத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதன் பொருள் தனியார் துறையும் பொதுத்துறையும் இணைந்து சீரிய முறையில் செயல்படுவது ஆகும்.ஒருபுறம் மிக முக்கியமான அடிப்படை மற்றும் கனரக தொழில்கள் பொதுத்துறையில் நிர்வகிக்கப்படுகின்றன. அதேசமயம் பொருளாதார தாராளமயமாக்கல் என்ற தனியார் துறையின் வளர்ச்சி முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதனால் தனியார் துறையும் ஒரே கட்டமைப்பின் கீழ் இணைந்து செயல்பட ஏதுவாகிறது.
2.வேளாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது
இந்தியாவில் அதிகமானோர் வேளாண் தொழில் செய்து வருவதால் அது பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது இந்தியாவில் 60 சதவீத மக்கள் தங்கள் வாழ்க்கை ஆதாரமாக வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் இந்தியாவில் 70% மொத்த உள்நாட்டு உற்பத்தி வேளாண்துறையில் இருந்தே கிடைக்கிறது.பசுமைப் புரட்சி மற்றும் உயிரி தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளால் வேளாண்மையில் தன்னிறைவு அடைந்தது அல்லாமல் உபரி உற்பத்தி அடைந்துள்ளது. பழங்கள், காய்கறிகள், வாசனைப் பொருட்கள், தாவர எண்ணை, புகையிலை, விலங்குகளின் தோல் போன்ற இந்திய வேளாண் பொருட்களின் மூலம் நமது பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கின்றன
3.வளர்ந்துவரும் சந்தை
முன்னேறிக் கொண்டிருக்கும் நாடுகளுக்கிடையே இந்தியாவின் சந்தை பிற நாடுகளுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகிறது நிலைத்த உள்நாட்டு உற்பத்தியை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பதால் பிற நாடுகள் அன்னிய நேரடி முதலீடு மற்றும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர் இது இன்னொரு வகையில் இந்திய பொருளாதாரம் வலிமையாக மாறுவதற்கு உதவி செய்து வருகிறது இந்தியா குறைந்த முதலீட்டில் குறைவான இடர்பாடு காரணிகளால் அதிகமான வளர்ச்சி சாத்தியங்களை கொண்டுள்ளதால் நம் நாடு வேகமாக வளர்ந்து சந்தையாக மாறியிருக்கிறது
4.வளர்ந்து வரும் பொருளாதாரம்
உலக பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (2018)ஜிடிபி 7-வது இடத்தையும் வாங்கும் சந்தையில் பிபிபி 3 இடத்தையும் பெற்றுள்ளது விரைவான பொருளாதார வளர்ச்சியின் விளைவாக இந்திய பொருளாதாரம் ஜி-20 நாடுகளின் இடம்பெற்றுள்ளது
5.வேகமாக வளரும் பொருளாதாரம்
இந்திய பொருளாதாரம் அதிக நிலையான வளர்ச்சி கொண்டது.2016-17 ல் சீன மக்கள் குடியரசு நாட்டிற்கு அடுத்தபடியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.1% பெற்றதன் வாயிலாக உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளுக்கு இடையே இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை காட்டுகிறது
6.வேகமாக வளரும் பணிகள் துறை
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு பணிகள் துறையின் பங்களிப்பு. தகவல் தொழில்நுட்பம் பிபிஓ போன்ற தொழில்நுட்ப சேவைகள் பேரளவு வளர்ச்சி பெற்றுள்ளது இவை பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கின்றன. இத்தகைய வளர்ந்து வரும் பணிகள் துறைகள் நாட்டை உலக அளவில் கொண்டு செல்லவும் மற்றும் பணிகள் துறையின் பிரிவுகளை உலகம் முழுவதும் பரவச் செய்யவும் துணை நிற்கின்றன .
7.பேரளவு உள்நாட்டு நுகர்ச்சி:
நமது நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளதால், உள்நாட்டு நுகர்வுப் பொருட்களை வாங்குவதும் பெருமளவு அதிகரித்திருக்கிறது வாழ்க்கை தரம் உயர்ந்ததால் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றி உள்ளது
8.நகரப்பகுதிகளில் விரைவான வளர்ச்சி
பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகளில் நகரமயமாதல் முக்கிய அறிகுறியாகும். சுதந்திரத்திற்குப் பின்னர் நகரங்கள் விரைவான வளர்ச்சி பெற்று வருகிறது. மேம்பட்ட போக்குவரத்து மற்றும் தொடர்புகள் கல்வி மற்றும் சுகாதார வசதிகள் நகரமயமாதல் ஆகியவை மேலும் விரைவுபடுத்துகின்றன.
9.நிலையான பேரளவு பொருளாதாரம்
உலக நாடுகளில் இந்தியா ஒரு நிலைத்த பேரளவு பொருளாதார நாடு என்பதை தொடர்ந்து நிரூபித்து வருவதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன பொருளாதார ஆய்வறிக்கையின்படி 2015 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 8 சதவீதமாக இருக்கும் என நிர்ணயித்து இருந்தபோதிலும் உண்மையான வளர்ச்சி அதைவிட சற்று குறைவாக 7.6 ஆக இருந்தது இதன் மூலம் இந்தியா ஒரு நிலையான பெயரளவு பொருளாதார வளர்ச்சி உடையது என்று நிரூபித்து வருகிறது
10.மக்கள் தொகை பகுப்பு
இந்திய மனிதவளம் இளைஞர்களால் நிரம்பியுள்ளது இதன் பொருள் இந்திய அளவில் அதிக அளவு இளைஞர்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. இளைஞர்களே வளர்ச்சியின் அடிப்படை. இந்திய இளைஞர்களின் திறமை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் காரணமாக பொருளாதார வளர்ச்சி உச்சத்தை எட்டியுள்ளது. நாடு உச்ச வளர்ச்சி அடைவதற்கு மனித வளம் ஒரு முக்கிய பங்கு அளிக்கிறது. மேலும் இது வெளிநாட்டு முதலீட்டையும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளையும் ஈர்க்கிறது.