பொருளாதாரத்தைப் பற்றி படிக்கின்ற ஒரு இயலே பொருளியல்.இந்தப் பொருளியலானது 4 இன்றியமையாத உட்பிரிவுகளைக் கொண்டது ஆகும்.நான்கு உட்பிரிவுகளையும் அவற்றின் வரையறை என்னவென்பதையும் இப்பதிவில் காணலாம்.
1.நுகர்வு
2.உற்பத்தி
3.பரிமாற்றம்
4.பகிர்வு
1.நுகர்வு
மனித விருப்பங்களை நிறைவு செய்யும் நுகர்வு பொருளாதார நடவடிக்கையில் துவக்கப் புள்ளியாக விளங்குகிறது. இந்தப் பகுதியில் மனித விருப்பங்களின் இயல்புகளின் அடிப்படையில் நுகர்வோர் நடத்தை, குறைந்து செல் பயன்பாடு, நுகர்வோர் உபரி போன்ற பல விதிகள் விளக்கப்பட்டுள்ளன.
2.உற்பத்தி
உள்ளீடுகளை வெளியீடுகளாக மாற்றும் செயல்பாடு உற்பத்தி எனப்படும்.இது உற்பத்தி காரணிகளின் இயல்புகளை உள்ளடக்கி உள்ளது. அதாவது நிலம், உழைப்பு, மூலதனம், தொழில் அமைப்பு மேலும் உள்ளீடு வெளியீடுகளுக்கு இடையேயான உறவு ஆகியன இப்பிரிவில் இடம்பெற்றுள்ளன.
3.பரிமாற்றம்
பரிமாற்றம் என்பது பல்வேறு அமைப்புகளின் மூலம் விலை தீர்மானிக்கப் படுவதோடு தொடர்புடையது. இதன் பிரிவு வர்த்தகம் மற்றும் வணிகத்தை உள்ளடக்கியது. உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் நுகர்வோரின் கைகளுக்கு கிடைக்கின்ற போது தான் நுகர்வு சாத்தியமாகிறது.
4.பகிர்வு
உற்பத்தி என்பது உற்பத்தி காரணிகளின் பங்களிப்பு மூலம் கிடைக்கும் விளைவாகும். இவ்வாறாக நிலம் உழைப்பு, மூலதனம், தொழில் அமைப்பு போன்றவைகளில் முயற்சியால் பண்டங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்யப்பட்ட செல்வங்கள் உற்பத்தி காரணிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இப்பிரிவில் உற்பத்தி காரணிகளுக்கு வழங்கப்படும் ஊதியங்களான வாரம், கூலி, வட்டி, மற்றும் லாபம் ஆகியவற்றைப் பற்றிய படிக்கப்படுகிறது. பகிர்வு என்னும் பகுதி உற்பத்தி காரணிகளின் விலைகள் நிர்ணயிக்கப்படுவதை விளக்குகிறது.
பொருளியலின் உட்பிரிவுகள் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.
பொருளியலின் உட்பிரிவுகள் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.