Headlines News :
Home » » அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பொதுத்தமிழ்-இலக்கணம் - TNPSC

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பொதுத்தமிழ்-இலக்கணம் - TNPSC


 
 
    வணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள் மற்றும் நூல்கள் என்ற பகுதியில் இருந்து தவறாமல் வினாக்கள் கேட்கப்பட்டன. வருகின்ற தேர்விலும் அதேபோல் கேட்கப்படலாம். எனவே கொஞ்சம் நேரம் எடுத்து வாசித்து இவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்..


தேசியக் கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்காலத் தமிழ் இலக்கிய விடிவெள்ளி, ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா- பாரதியார்


பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர், இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ், பூங்காட்டுத் தும்பி - பாரதிதாசன்


காவடி சிந்துக்குத் தந்தை (காவடி சிந்து நூல்), கவிராயர் - அண்ணாமலைகாந்தீயக் கவிஞர் - நாமக்கல் கவிஞர்


சென்னையில் தமிழ்ச்சங்கம் நிறுவியவர் -

                                                     வேங்கட ராஜூலு ரெட்டியார்


உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் - மு.வரதராசனார்

சிலம்புச்செல்வர் - ம.பொ.சிவஞானம்

சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை


சொல்லின் செல்வன் - அனுமன்


தமிழ்த்தென்றல் - திரு.வி.க.


வள்ளலார் - ராமலிங்க அடிகளார்

கிருத்துவக்கம்பன் - எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை


தனது கல்லறையில் தன்னை ஓர் தமிழ் மாணாக்கன் என எழுதச் சொன்னவர் - ஜி.யூ.போப்.


ஆசு கவி - காளமேகப் புலவர்.


எழுத்துக்கு - இளம்பூரணார்.

சொல்லுக்கு - சேனாவரையார்.

உரையாசிரியர் - இளம்பூரணார்.

உச்சிமேல் புலவர் கொள் - நச்சினார்க்கினியர்


தமிழ் வியாசர் -  நம்பியார் நம்பி.

புதினப் பேரரசு - கோ.வி.மணிசேகரன்


ஏழிசை மன்னர் - தியாகராய பாகவதர்


மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்

கவிக்கோ - அப்துல் ரஹ்மான்


தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட், தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - கல்கி


தமிழ் முனி, குருமுனி, குறுமுனி, பொதிகை முனி - அகத்தியர்


தொண்டர் சீர் பரவுவார், பக்தி சுவை நனி சொட்ட சொட்டப் பாடிய கவி, உத்தம சோழ பல்லவராயன், இராமதேவர் (கல்வெட்டுகள்), அருண்மொழித் தேவர் - சேக்கிழார்


இலக்கணத் தாத்தா - மே.வி.வேணுகோபால்

முத்தமிழ்க்காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை


சிறுகதையின் மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான்

                                                                  -புதுமைப்பித்தன்


தென்னாட்டு மாப்பசான், சிறுகதையின் சித்தன், சிறுகதையின் முடிசூடா மன்னன் - ஜெயகாந்தன்


தென்னாட்டு பெர்னாட்ஷா,பேரறிஞர், தென்னாட்டு காந்தி - அண்ணாதுரை


தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்


புதுக்கவிதையின் முன்னோடி, தமிழில் புதுக்கவிதை தோற்றுவித்தவர் - ந.பிச்சமூர்த்தி


தமிழ்த் தாத்தா - உ.வே.சா


தமிழ் நாடகத் தந்தை - சம்பந்த முதலியார்

தமிழ் நாடகத் தலைமையாசிரியர், நாடக உலகின் இமயம் - சங்கரதாஸ் சுவாமிகள்


உவமைக் கவிஞர் - சுரதா


தெற்காசிய சாக்ரடீஸ் - பெரியார்


தமிழ் உரைநடையின் தந்தை, தமிழ் இலக்கியத் தோற்றுநர் - வீரமாமுனிவர்


குற்றியலுகர ஒலியை முதலில் உவமையாக எடுத்தாண்டவர்,

தமிழ்நாட்டின் ‘வேர்டு ஸ்வர்த்’, பாவலர் மணி, பாவலர் மன்னன்,

பிரெஞ்ச் நாட்டின் ‘செவாலியே’, தமிழ் நாட்டின் தாகூர், கவிஞரேறு

                                                                                  - வாணிதாசன்.


கவி யோகி - சுத்தானந்த பாரதி.


தற்கால உரைநடையின் தந்தை - ஆறுமுக நாவலர்.


தனித் தமிழ் இலக்கியத்தின் தந்தை - மறைமலைஅடிகள்


வில்லுப் பாட்டுக்காரர் - கொத்தமங்கலம் சுப்பு.

ஆசிய ஜோதி - நேரு

ஆசிய ஜோதி நூலை எழுதியவர் - கவிமணி

மூல நூலை எழுதியவர் - எட்வின் அர்னால்ட்

திருவாதவூரர், தென்னவன், உத்தம சீலன் - மாணிக்கவாசகர்

தமிழ்நாட்டின் அட்லி சேஸ் - சுஜாதா

தென்னாட்டு தாகூர் - வெங்கட ரமணீ

பண்டித மணி - கதிரேசன் செட்டியார்

சிவபெருமானால் அம்மையே என அழைக்கப்பட்டவர், பேயார் - காரைக்கால் அம்மையார்


வெண்பா பாடுவதில் வல்லவர் - புகழேந்தி

பிள்ளைத் தமிழ் இலக்கிய முன்னோடி - பெரியாழ்வார்

தமிழில் முதல் இலக்கிய ஞானபீடவிருது. - அகிலன்

                                                                             (சித்திரப்பாவை)

தமிழில் உபநிடதங்கள் படைத்தவர் - தாயுமானவர்

கவிராட்சசன் - ஒட்டக்கூத்தர்

திவ்ய கவி,  அழகிய மணவாளர் தாசர் ,தெய்வக் கவி

                             - பிள்ளைப் பெருமாள் (ஐயங்கார்)

நாட்டுப்புறவியலின் தந்தை - ஜேக்கப் கரீம்.

தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை - வானமா மலை.

மண் தோய்ந்தப் புகழினான் - கோவலன்

வீடு வீடாக பிச்சையெடுத்துத்  தமிழ் தொண்டு செய்தவர் - ஆறுமுக நாவலர்

பொய்யாக்குலக்கொடி - வைகை

கணக்காயர் என்பவர் - சோமசுந்தர பாரதியார்

நீதி நாயகர் - வேதநாயகம் பிள்ளை

கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்

முச்சங்கம் வளர்கூடல் நகர்- மதுரை

தமிழ் நந்தி - மூன்றாம் நந்தி வர்மன், தண்டமிழ் ஆசான், நன்னூல் புலவன், கூலவாணிகன் - சீத்தலைச் சாத்தனார்
                                                                       
நற்றமிழ்ப் புலவர், மதுரை தமிழ்ச் சங்கத் தலைவர் - நக்கீரர்

தமிழ்க் கவிஞருள் அரசர் - திருத்தக்கதேவர்

தமிழ் வேதம் செய்த மாறன், குருகைக் காவலன்,பராங்குசன், சடகோபன் - நம்மாழ்வார்

சூடிக்கொடுத்த சுடர்கொடி,வைணவம் தந்தச் செல்வி - ஆண்டாள்

குழந்தைக் கவிஞர் - அழ.வள்ளியப்பா

மக்கள் கவிஞர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்

சைவ சமயத்தின் செல்வி - மங்கையற்கரசியார்


திராவிட ஒப்பிலக்கணத் தந்தை - கார்டுவெல்


நவீன கம்பர் -மீனாட்சி சுந்தரம் பிள்ளை

நாவலர் - சோமசுந்தர பாரதி


இந்திய சினிமா தந்தை - தாதாசாகிப் பால்கே


ஆட்சி மொழிக் காவலர் - ராமலிங்கனார்

ஆஸ்தானக் கவிஞர் - நா.காமராசன்

கவியரசு - கண்ணதாசன்

திருக்குறளார் - வி.முனுசாமி

கவிப்பேரரசு - வைரமுத்து

தசாவதாணி - செய்கு.தம்பியார்

பண்மொழிப் புலவர் -அப்பாதுரை (எ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை

நரை முடித்துச் சொல்லால் முறை செய்த அரசன் - கரிகாலன்

திருமுறைகளை தொகுக்குமாறு வேண்டிய அரசன் - முதலாம் ராஜராஜன்

சைவ உலக செஞ்ஞாயிறு, ஆளுடை அரசு, தர்ம சேனர், மருள் நீக்கியார், அப்பர்- திருநாவுக்கரசர்

தோடுடைச் செவியன், காளி வள்ளல்.ஆளுடைப் பிள்ளை, தோணி புறத் தோன்றல், திராவிட சிசு, நாளும் இன்னிசையால் தமிழ் பரப்புவர் - திருஞான சம்பந்தர்

ஆளுடை நம்பி, திருநாவலூரார், நம்பி ஆரூரார்,வன்தொண்டர், தம்பிரான் தோழர் - சுந்தரர்.

நல்லிசைப் புலவர், தமிழ் மூதாட்டி - ஔவையார்

மும்மொழிப் புலவர் - மறைமலை அடிகள்

விஷ்ணுசித்தர் - பெரியாழ்வார்.

தேசியம் காத்தச் செம்மல் -திரு.வி.க
பிரணவ கேசரி,வேதாந்த பாஸ்கர் -முத்துராமலிங்க தேவர்

திருக்குற்றால நாதர் கோவில் வித்வான் - திரிகூடராசப்ப கவிராயர்

இரட்டைப் புலவர்கள் - இளஞ்சூரியர், முதுசூரியர்

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும். 

---------------------------------------------------------------------------------------------------------

சந்தேகங்களை கருத்துரை பெட்டி வாயிலாக கேட்கவும்..

பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயனடையட்டும்..

--------------------------------------------------------------------------------------------------------
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Featured Post

TNPSC - தமிழக வரலாறு பண்பாடு - என்னென்ன படிக்க வேண்டும்?

தமிழக வரலாறு பண்பாடு என்னென்ன படிக்கலாம்? தமிழக வரலாறு பண்பாடு  பாடத்திட்டம் ஒருபார்வை டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 மற்...

Popular Posts

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. வென்று காட்டு! - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template