Headlines News :
Home » , , , , , » மரபுப்பிழை நீக்குதல் - இலக்கணம் -பொதுதமிழ் - TNPSC

மரபுப்பிழை நீக்குதல் - இலக்கணம் -பொதுதமிழ் - TNPSC


மரபுப்பிழை நீக்குதல் என்றால் என்ன?


மரபுகளை மீறாமல் நமது முன்னோர்கள் ஒன்றை எப்படி அழைத்தார்களோ அம்மரபினை மாற்றாமல் அப்படியே அழைக்க வேண்டும்.அப்படியில்லாம தவறாக சொல்லும் பட்சத்தில் அது மரபுப்பிழை ஆகும்.அவற்றை திருத்தி அமைத்தலே மரபுப்பிழை நீக்குதல் ஆகும்.

வினா எப்படி கேட்கப்படும்?

பறவை மற்றும் விலங்குகளின் ஒலி குறிப்பு சொற்கள்  

பறவை மற்றும் விலங்குகளின் இளமைப்பருவங்கள்

தாவரங்களின் உறுப்பு பெயர்கள்

செடி, கொடி மரங்களின் தொகுப்பு 

பொருள் மற்றும் உயிரினங்களின் தொகுப்பு பெயர்கள் 

ஆகியவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்..

 உதாரணம்:


 எங்கே படிக்க வேண்டும்?


கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தொகுப்பினை நன்கு வாசித்து அறிந்துகொண்டாலே போதுமானது.

 பறவைகள்                                                            விலங்குகள்

ஆந்தை - அலறும்                                              நாய் - குரைக்கும்

கோழி - கொக்கரிக்கும்                                     நரி - ஊளையிடும்

குயில் - கூவும்                                                     குதிரை கனைக்கும்

காகம் - கரையும்                                                 கழுதை - கத்தும்

கிளி - பேசும்                                                          பன்றி - உறுமும்

மயில் - அகவும்                                                   சிங்கம் - முழங்கும்

கோட்டான் - குழலும்                                        பசு - கதறும்

வாத்து - கத்தும்                                                   எருது - எக்காளமிடும்

வானம்பாடி - பாடும்                                          எலி - கீச்சிடும்

குருவி - கீச்சிடும்                                                தவளை - கத்தும்

வண்டு - முரலும்                                                குரங்கு - அலம்பும்

சேவல் - கூவும்                                                    பாம்பு - சீறிடும்

கூகை - குழலும்                                                   யானை - பிளிரும்

புறா - குனுகும்                                                      பல்லி - சொல்லும்

------------------------------------------------------------------------------------------------------------

பறவை மற்றும் விலங்குகளின் இளமைப் பருவம்

புலிப்பரள்             சிங்கக்குருளை

பூனைக்குட்டி      எலிக்குஞ்சு
 

கோழிக்குஞ்சு  பன்றிக்குட்டி
 
குதிரைக்குட்டி    கீரிப்பிள்ளை

கழுதைக்குட்டி    மான்கன்று

ஆட்டுக்குட்டி      யானைக்கன்று

---------------------------------------------------------------------------------------------------------

தாவரங்களின் உறுப்புப் பெயர்கள்

சோளத்தட்டு      முருங்கைக்கீரை

தாழைமடல்        தென்னங்கீற்று

வாழையிலை     பனையோலை

வேப்பந்தழை      மாவிலை

மூங்கில் இலை நெல்தாள்

-------------------------------------------------------------------------------------------------------------

செடி, கொடி மரங்களின் தொகுப்பு

பூந்தோட்டம்                     மாந்தோப்பு                  வாழைத்தோட்டம்

தேயிலைத் தோட்டம்   சோளக்கொல்லை   சவுக்குத்தோப்பு

தென்னந்தோப்பு              பனங்காடு                    வேலங்காடு

---------------------------------------------------------------------------------------------------------------

பொருட்களின் தொகுப்பு பெயர்கள்

ஆடு - மந்தை          மாடு - மந்தை

எறும்பு - சாரை       கல் - குவியல்

சாவி - கொத்து       திராட்சை - குலை

பசு - நிரை                 யானை - கூட்டம்

வீரர் - படை             வைக்கோல்- போர்

விறகு - கட்டு         மக்கள் - தொகுப்பு

---------------------------------------------------------------------


மரபுப்பிழை நீக்குதல் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும். 
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Featured Post

இந்திய வரலாறு தேர்வு -2 நாள்:5.07.2020

இந்திய வரலாறு (சிந்துசமவெளி முதல் குப்தப் பேரரசு வரையிலான)  50 மதிப்பெண்களுக்கான தேர்வெழுத வந்த உங்கள் அனைவருக்கும் வணக்கம்.. எல்லா வி...

Popular Posts

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. வென்று காட்டு! - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template