Headlines News :
Home » » அயோத்திதாசர் - Ayothidasa pandithar

அயோத்திதாசர் - Ayothidasa pandithar


அயோத்திதாசர்

பண்டித அயோத்திதாசர் ஒரு தீவிர தமிழறிஞரும், சித்த மருத்துவரும், பத்திரிகையாளரும், சமூக அரசியல் செயல்பாட்டாளரும்  ஆவார்.  தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி இவர். திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர். சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மக்கிமா மாநகரில் 1845 ஆம் ஆண்டு மே திங்கள் 20 ஆம் நாள் பிறந்தார். அயோத்திதாசரின் இயற்பெயர் காத்தவராயன் என்பதாகும். தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை என்று அயோத்திதாசர் போற்றி புகழப்பட்டார். இவர்  தந்தையார் பெயர் கந்தசாமி. பெரும் கல்விப்புலம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தாத்தா பட்லர் கந்தப்பன் அவர்கள் பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளைத் தன் குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிஸ் துரையிடம் வழங்கியவர். அதன் பின்னர்தான் திருக்குறள் இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது.


  

காத்தவராயன் அவர்கள் தனது ஆசிரியர் அயோத்திதாசர் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை அயோத்திதாசர் என மாற்றிக் கொண்டார். தமிழ் , ஆங்கிலம்,  சமஸ்கிருதம் , பாலி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். ஒடுக்கப்பட்டோரின் கோவில் நுழைவுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதற்காக பண்டிதர் அயோத்திதாசர் அத்வைத்தானந்தா சபா எனும் அமைப்பை நிறுவினார். 1822 இல் அயோத்திதாசரும் ஜான் திரவியம் என்பவரும் திராவிடர் கழகம் என்னும் அமைப்பை நிறுவினர். 

மேலும் 1885ல்  அயோத்திதாசர் திராவிட பாண்டியன் என்னும் இதழையும் தொடங்கினார் .  திராவிட மகாஜன சபை என்ற அமைப்பை 1891 ல் நிறுவி  அந்த அமைப்பின் முதல் மாநாட்டை நீலகிரியில் நடத்தினார் .  1907 ல் ஒரு பைசா தமிழன் என்ற பெயரில் ஒரு வாரப் பத்திரிகையைத் தொடங்கி 1914 ல் அவர் காலமாகும் வரையிலும் தொடர்ந்து வெளியிட்டார் .  பிரம்மஞான சபையை நிறுவியவர்களில் ஒருவரான கர்னல் ஹென்றி ஆல்காட்  என்பவர் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக 1898 இல் இலங்கை சென்ற அவர் அங்கே பௌத்தத்தைத் தழுவினார்.   அதே ஆண்டு சென்னையில் சாக்கிய பௌத்த சங்கம் என்னும் அமைப்பை நிறுவினார்.  சமூக சீர்திருத்தக் கருத்துக்களை விதைத்துப் பயிராக்கி மகிழ்ந்த அயோத்திதாசர் நீலகிரி மலைப்பகுதியில் வாழும் தோடர் இனப்பிரிவில் கலப்புத்திருமணம் செய்து கொண்டார்.  அயோத்திதாசர் புத்த மதக்கருத்துகளால் கவரப்பட்டார்.  தமக்குப் பிறந்த மகன்களுக்கு பட்டாபிராமன், மாதவராம், சானகிராமன், இராசாராம் எனவும், மகள்களுக்கு  அம்பிகாதேவி எனவும், மாயாதேவி எனவும் பெயர் சூட்டினார்.   ஒடுக்கப்பட்டவர்களை  சாதி பேதமற்ற திராவிடர் என அழைத்த அயோத்திதாசர்  மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது அவர்களை சாதியற்ற திராவிடர்கள்  என பதிவு செய்யுமாறு வற்புறுத்தினார் . 

ஆல்காட்  என்பவரின் உதவியோடு சென்னையில் முக்கியமான  ஐந்து இடங்களில் ஆல்காட் பஞ்சமர் பள்ளிகள் என தலித்துகளுக்கு இலவசப் பள்ளிகளை நிறுவினார் .  புத்தரது ஆதிவேதம் என்னும் நூலை 28 கதைகள் கொண்ட பெரும் நூலாக எழுதினார் .   இதற்கு சான்றாக பெருங்குறவஞ்சி , வீரசோழியம்,  நன்னூல் விளக்கம் , நாயனார் திருக்குறள் , சித்தர் பாடல்கள்,  வைராக்கிய சதகம், மச்சமுனிவர் ஞானம் முதலிய நூல்களை துணை நூல்களாகக் கொண்டார்.  ஆதிவேதத்தை   பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளின்  துணையுடன் எழுதியுள்ளார் .  இவரது இந்திர தேச சரித்திரம் என்னும் நூலும் பாராட்டத்தக்கது.   இவை தவிர 25க்கும் மேற்பட்ட சிறு நூல்களை வெளியிட்டுள்ளார்.   அயோத்திதாசர்  1914 ஆம் ஆண்டு, மே மாதம்  ஐந்தாம் நாள் இயற்கை எய்தினார் . தீபங்களின் வரிசை தீபாவளி என்றும், கண்ணன் நரகாசுரனைக் கொன்று வெற்றி பெற்ற நாளே திருநாள் என்றும் மகாவீரர் முக்தி அடைந்த நாளே தீபாவளி என்றும் இன்று வரை பேசப்படுகிறது.   ஆனால் பௌத்த சமயத்தில் ஆழங்கால்பட்டவரான அயோத்திதாச பண்டிதர் தனது மருத்துவ ஆராய்ச்சியின்படி எள் செடியின் விதையிலிருந்து நெய் கண்டுபிடித்த திரு நாளே தீபாவளி என்று புதியதோர் விளக்கம் தந்தார் .  அதற்கு ஆதாரமாக  ஜப்பான் நாட்டில் இன்றும் நுகர்பொருள் கண்டுபிடிப்பு திருநாளாக தான் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள் என்று சான்று காட்டினார்.   சித்த மருத்துவத்தில் கை சேர்ந்ததால் மருத்துவர் என்றும் பண்டிதர் என்றும் அழைக்கப்பட்டார் . 

Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Featured Post

TNPSC - தமிழக வரலாறு பண்பாடு - என்னென்ன படிக்க வேண்டும்?

தமிழக வரலாறு பண்பாடு என்னென்ன படிக்கலாம்? தமிழக வரலாறு பண்பாடு  பாடத்திட்டம் ஒருபார்வை டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 மற்...

Popular Posts

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. வென்று காட்டு! - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template